இக்கட்டுரையில் நாம் காணப்போவது முளைக்கீரை மற்றும் சேனைக்கிழங்கில் மசியல் செய்வதற்கான சில சமையல் குறிப்புகள்.
தாளிக்க: கடுகு மற்றும் உலுந்தம் பருப்பு அரை ஸ்பூன், தேவையான அளவு உப்பு, எண்ணெய் 1 டீஸ்பூன், சிறிதளவு கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை,
துவரம்பருப்பு 1 டீஸ்பூன், பெருங்காயம் கால் டீஸ்பூன்.
மேலும் இது போன்ற சமையல் குறிப்புகள் மற்றும் மருத்துவக் குறிப்புகள், ஹெல்த் டிப்ஸ், அழகுக் குறிப்புகள், போன்றவற்றை தெரிந்து கொள்ள இந்த இணயதளத்தை பின்பற்றவும். மேலும் உங்களுக்கு வேரேதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கமென்ட் செய்யவும். மேலும் எங்களை ஃபேஸ்புக்கிலும் தொடர்பு கொள்ளலாம்.
முளைக்கீரை மசியல்
தேவையானவை
முளைக்கீரை ஒரு கட்டு, தேங்காய் எண்ணெய் இரண்டு ஸ்பூன், நெய் இரண்டு ஸ்பூன், கடுகு ஒரு ஸ்பூன், காய்ந்த மிளகாய் நான்கு, தேவையான அளவு உப்பு.செய்முறை
கீரையை நன்கு அலசி ஆய்ந்து பொடியாக நறுக்கவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரில் 1 விசில் விட்டு வேக வைக்கவும். பின்பு கீரையை தண்ணீர் இல்லாமல் ஒரு தட்டில் ஆற வைக்கவும். பின்பு அதை மிக்சி ஜாரில் போட்டு சிறிது உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். பின் கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் நெய் ஊற்றி சூடானவுடன் கடுகு காய்ந்த மிளகு போட்டு தாளித்து கீரை மசியலை கடாயில் ஊற்றி ஒரு தடவை கிளறி இறக்கவும். இந்த மசியல் வற்றல் குழம்பு சாதத்துக்கு தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கும். சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். முளைக்கீரை உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இது கோடைகால வெயிலுக்கு உகுந்த சமையல்.சேனைக்கிழங்கு மசியல்
தேவையானவை
சிறுதுண்டுகளாக நறுக்கிய சேனைக்கிழங்கு ஒரு கப், துவரம் பருப்பு கால் கிலோ, பச்சை மிளகாய் மற்றும் மிளகாய் வத்தல் மூன்று, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் கால் ஸ்பூன், புளி எலிமிச்சை அளவு.தாளிக்க: கடுகு மற்றும் உலுந்தம் பருப்பு அரை ஸ்பூன், தேவையான அளவு உப்பு, எண்ணெய் 1 டீஸ்பூன், சிறிதளவு கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை,
துவரம்பருப்பு 1 டீஸ்பூன், பெருங்காயம் கால் டீஸ்பூன்.
செய்முறை
சேனைக்கிழங்குகளை தோல் சீவி நன்றாகக் கழுவவும். குக்கரில் கிழங்கு, பருப்பு இரண்டையும் தனித்தனியே வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு, கிழங்கை மட்டும் தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மசித்து புளியை கரைத்து ஊற்றி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதித்ததும் அதில் வெந்த துவரம் பருப்பை சேர்க்கவும். கொதிவரும்போது, எண்ணெயில் கடுகு, பச்சை மிளகாய், மிளகாய் வத்தல், பெருங்காயம், துவரம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து கொட்டி இறக்கவும்.மேலும் இது போன்ற சமையல் குறிப்புகள் மற்றும் மருத்துவக் குறிப்புகள், ஹெல்த் டிப்ஸ், அழகுக் குறிப்புகள், போன்றவற்றை தெரிந்து கொள்ள இந்த இணயதளத்தை பின்பற்றவும். மேலும் உங்களுக்கு வேரேதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கமென்ட் செய்யவும். மேலும் எங்களை ஃபேஸ்புக்கிலும் தொடர்பு கொள்ளலாம்.