Saturday, October 20, 2018

முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க இதை செய்யுங்கள்

    
    இக்கட்டுரையில் நாம் காணப்போவது முகத்தில் எண்ணெய் பசை நீங்குவதற்கான சில அழகுக் குறிப்புகள்.

செய்முறைகள் 

  • எண்ணெய் பசை சருமத்தினர், அடிக்கடி குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவ வேண்டும்.
  •  வெள்ளரிக்காயை தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிச்சாற்றுடன், பால் பவுடர் கலந்து தடவினாலும் எண்ணெய் வழியமல் முகம் பிரகாசமாக காணப்படும்.(இதை தொடர்ந்து ஒரு மாதம் பின்பற்ற வேண்டும்.)
  • தக்காளி பழத்தை நன்கு பிழிந்து சாறாக எடுத்து முகத்தில் தடவி காய்ந்த பின், கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன், வெள்ளரி அல்லது ஓட்ஸ் சேர்த்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம். 
  • பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன், கேரட் துருவலை சேர்த்து முகத்தில் தடவினால், அதிகமாக எண்ணெய் வழிவது குறையும். 
  • முகத்தை களுவுவதற்க்கு பதிலாக கடலைமாவை பயன் படத்துவாதல் எண்ணெய் வழிவது குறைவதோடு மாகமும் பளபளப்பாக இருக்கும். 
  • மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் எண்ணெய் வழிவது குறையும்.
  • வெள்ளரிக்காய் சாரு, எலுமிச்சை பழச்சாறு, சந்தனத்தூள், பாதாம் பவுடர், தயிர், உருளைக்கிழங்கு சாரு ஆகியவற்றை சம அளவில் எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் எண்ணெய் வழிவது குறையும். 
  • சோளத்தை நன்கு பவுடர் செய்து தயிர் மற்றும் எலுமிச்சை சாரு கலந்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தில் எண்ணெய் பசை நீங்கும். 
  • எண்ணெய் பசை சருமத்தினர், வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், சிறிது தயிர், கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாரு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் அதிகப்படியான எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும். 
  • எலுமிச்சை சாற்றுடன், முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சை சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொண்டு அவற்றை நன்றாக கலக்கி, முகத்தில் பூச வேண்டும். சிரிதி நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும். 
  • பப்பாளி கூழ், முல்தானி மட்டி, வேப்பிலை பொடி ஆகியவற்றை நன்றாக பசை போல் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் 2 முறை செய்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறையும். 
    முகத்தில் எண்ணெய் பசை நீங்கி பொலிவு பெற மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் கொளுத்தும் வெயிலிலும் நீங்கள் அழகுராணிதான். மேலும் இது போல அழகுக்குறிப்புகள், சமயல் குறிப்புகள் என அனைத்து தகவல்களையும் பின்பற்ற நம் இணயதளத்தை பின்பற்றவும்.

Friday, October 19, 2018

5 நாட்களில் உடல் எடயை குறைப்பது எப்படி?


      இந்த கட்டுரயில் 5 நாட்களில் உடல் எடயை குறைக்கவும் சருமம் பொலிவாக இருக்கவும் டயட் இருப்பது எப்படி என்று பார்க்க போகிறோம்.

உடல் எடயை  குறைப்பதற்கான டிப்ஸ்

  • காலை ஆறு மணிக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாருடன் தேன் கலந்து குடிக்க வேண்டும. 
  • காலை எட்டு மணிக்கு பழ வகைகளும், ஒரு டம்ளர் பாலும் குடிக்க வேண்டும். 
  • காலை பத்து மணிக்கு ஒரு டம்ளர் கேரட் ஜுஸ் குடிக்க வேண்டும். 
  • காலை பதினோன்றை மணி அளவில் முளை கட்டிய பயறு, சிறிய கப் தயிர், சாலட், மற்றும் ஒரு கிண்ணம் வேக வைத்த காய்கறிகள் உண்ண வேண்டும். 
  • மதியம் இரண்டரை மணி அளவில் ஒரு டம்ளர் மோர் குடிக்க வேண்டும். 
  • மதியம் நான்கரை மணி அளவில் பழரசங்களும் பழங்களும் உண்ண வேண்டும். 
  • மாலை ஆறரை மணி அளவில் ஒரு டம்ளர் கேரட் ஜுஸ் குடிக்க வேண்டும். 
  • இரவு எட்டு மணிக்கு பழங்கள், தயிர், சாலட், மற்றும் எண்ணை சேர்க்காத இரண்டு சப்பாத்தி உண்ண வேண்டும்.
  • பப்பாளி பழத்தில் கொலுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக இருப்பதால் இதனை உணவில் சேர்த்து வர உடல் எடை குறைவதுடன் வயிற்றுப் பிரச்சனயும் தவிர்க்கலாம். 
  • பிளம்ஸில் உள்ள சிட்ரிக் ஆசிட் உடலில் உள்ள தேவயற்ற கொலுப்புகளை கரைத்து விடும். மேலும் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும் தன்மை உள்ளது. எனவே உடல் எடை குறைப்பது எளிது.

குறிப்புகள்

       இந்த டயட்டை  பின்பற்றி வர உடல் எடை குறைவதுடன் சருமமும் பொலிவாக இருக்கும். பழங்கள் மற்றும் காய்கறிகள் எல்லா வகையான கனிம சத்துகளும் உயிர்ச்சத்துகளும் கொண்டுள்ளவை. அவைகளை  உணவில் சேர்த்துக்கொள்வதினால் உடம்பிற்கு தேவயான வைட்டமின்களும் தாதுப்பொருட்களும் கிடைக்கின்றன. இதனால் சருமமும் பொலிவாக இருக்கும்.
 (பெண்களுக்கான அறிவிப்பு; தேன் கலந்து சாப்பிட்டால் கற்பப்பை பதிப்படையும் என பயம் தேவை இல்லை)
        இதுபோல் டயட் டிப்ஸ் மற்றும் அழகுக் குறிப்புகள் தெரிந்து கொள்ள இந்த இணயதளத்தை பின்பற்றவும்.

சமயல் கத்து கொள்வதற்க்கு முன்னால் இதை தெரிந்துகொள்ளுங்கள்


    சமயல் கத்து கொள்வதற்கு முன்னால் ஒரு சில குறிப்பு தெரிந்து கொள்ளுங்கள். அந்த அடிப்படையில் உங்களுக்கான ஆறு குறிப்புகள் கீலே கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்புகள்

  • பாலை காய்ச்சுவதற்கு முன்பாக பாத்திரத்தை நன்றாக தண்ணீரால் களுவ வேண்டும். பின்பு பாலை பாத்திரதில் ஊற்றி காய வைத்தால் பாத்திரம் அடி பிடிப்பதை தவிர்க்கலாம்.
  • பாலை நீண்ட நேரம் புளிக்காமல் வைத்திருப்பதற்கு பாலை காய்ச்சும் போதே அதனுடன் ஏலக்காயைய் சேர்த்து கொதிக்க வைத்தால், பால் புளிக்காமல் இருக்கும்.
  • முட்டயை தண்ணீரில் கொதிக்க வைக்கும் போது  அதனுள் இருப்பவை வெளியே வராமல் இருப்பதற்கு கொதிக்கும் போலுதே தண்ணீரில் சிறிதளவு வினிகர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அவ்வாறு செய்தல் முட்டை ஓடு உடைந்தாலும் கூட உள்ளே இருப்பவை வெளியே வராது.
  • தோலை நீக்கிய ஊருளைக்கிலங்கை கெட்டு போகாமல் வைதிருப்பதற்க்கு அதனுடன் சிறு துளி வினிகர் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.
  •  காலான்கலை அலுமினிய பாத்திரதில் இட்டு சமைக்க கூடாது. ஏனென்றால், அது பாத்திரத்தை கருமையாக்கி விடும்.
  • எண்ணைய் கறையை நீக்குவதற்கு, எலும்பிச்சை பலத்தை இரண்டு துண்டாக வெட்டி உப்புடன் ஊற வைக்க வேண்டும். பின்பு அந்த துண்டுகளை வைத்து தேய்தால் கரை நீங்கி விடும்.
    இதுபோல் சமயல் குறிப்புகள் மற்றும் மருத்துவக் குறிப்புக்களை தெரிந்துகொள்ள  இந்த இணையதளத்தை பின்பற்றவும்.